பறவைக்கான சிறகுகள்முளைக்க வேண்டுமெனத்தானே
மெனக்கெடுகின்றனர்
தாய்களும் தந்தைகளும்எப்போதுதான் பெரியவராகிக்
கடமைகள் ஓயுமோ எனச் சலிக்கையிலும்
நோயில் கலங்கிடினும்,
சிறகு முளைத்துப் பறவை பறக்கையில்
நெஞ்சில் எழுந்து
தொண்டை அடைக்கும்
அது என்ன?
.................................................................................
சிற்றில்லில்அதிகாரத்துடன் நடமாடிய
பேரிளம் பெண்நினைவு மறந்து
பெயரும் மறந்து
திரிந்து போனது
எவ்வினை?
,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,
எங்கிருந்தும் வந்திருப்போம்
எவ்விடத்தும் குடியிருப்போம்
முன்னாலே வந்தவர்க்கும்
பின்னாளில் வந்தவர்க்கும்
எந்நாளும் எப்போதும்மறுப்பில்லை
எந்நிறமும் கொண்டிருப்போம்
எம்மொழியும் பேசிடுவோம்
எக்கடவுள் எந்தமதம்
எந்தயிடம் என்றெல்லாம்
கேட்டாலும் தெரிந்தாலும்
எல்லாம் பெயர்களே
என்றிருப்போம்