சிறுதொகை
வெட்கப்பட வேண்டியதிருக்கிறது
நல்லவனாக இருக்க முயல்வது குறித்து
கூச்சப்பட வைக்கிறது
புகழ் தேடும் மனிதர்களின்
நெற்றியில் எழுதப்படும் வார்த்தைகள்
ஒளித்து வைக்கிறது மனம்
குழந்தைத்தனத்தை
வீரர்கள் அரங்கேற்றும்
கோமாளி நாடகங்கள்
அறிஞர்களின் மனங்களில்
விலங்குகள்
நரிகளுக்கு
மிஞ்சுவது எதுவோ?
வெட்கப்பட வேண்டியதிருக்கிறது
நல்லவனாக இருக்க முயல்வது குறித்து
கூச்சப்பட வைக்கிறது
புகழ் தேடும் மனிதர்களின்
நெற்றியில் எழுதப்படும் வார்த்தைகள்
ஒளித்து வைக்கிறது மனம்
குழந்தைத்தனத்தை
வீரர்கள் அரங்கேற்றும்
கோமாளி நாடகங்கள்
அறிஞர்களின் மனங்களில்
விலங்குகள்
நரிகளுக்கு
வழங்கப்படும் சிறகுகள்
பூமியில் மனிதர்களுக்காகமிஞ்சுவது எதுவோ?