Tuesday, 7 August 2012


விஷ பூமியில் புத்தர் சிரித்தார்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து..
புத்தரின் கையில் ஆயுதங்கள் கொடுத்து
அரச அதிகாரம் கைப்பற்ற
இரண்டாயிரம் வருடங்கள் முன்
தேராவாதமும், மஹாயானமும்
இன்னும் இன்னும் எத்தனையோ
புத்தரின் பெயரால்
மோதிக்கொண்ட
அதே இலங்கையில்…
 
புத்தர் வெளியேறிவிட்டார்
அப்போதே
அரியாசனங்களிலிருந்து..
அவர் பிறந்த இந்தியாவில்
தேடியும் காணவில்லை
புத்தரை
இரண்டாயிரம் வருடங்களாக.

அவர்
காந்தியாக பிறந்திருக்கக் கூடும்.
வரையும் விட்டுவைக்கவில்லை..கடைசிவரை. 
இன்னொரு புத்தர்
பிறப்பாரென்று எதிர்பார்க்கவில்லை
யாரும்.
பிறந்தும்
என்ன செய்துவிடுவார்?
அவரைவிட பெரிய தலைவர்கள் இருக்கையில்..