Monday, 23 April 2012

நிறைவு பெறாத கவிதை

ஒவ்வொரு நாளும் எழுதி எழுதி
ஓயவில்லை கைகள்
ஒவ்வொரு முறையும் திருத்தி
உயிர் பெறவில்லை கவிதை
எண்ணத்திற்கும் விரல்களுக்குமான
போட்டியில்
நடுவராக வந்து நிற்கும்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று
நிறுத்திவிடும் நினைவை
இன்றைக்கான கனவை
நாளைக்காக ஒத்திப் போட்டால்
நாளை தூங்குவதென்ன நிச்சயம்?

வீட்டுக் குருவிகளைத் தேடிக்
காண முடியாத இந்நாட்களில்
கனவுகளைத் தேடுவது எங்கே?



















           





















  







 

வேண்டிய வேண்டியாங்கு





எப்போதும் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்என் மகளுக்குச்
சொல்லவேண்டியதையும்,
வேண்டாததையும்
அவளும் தேடிக் கொண்டிருக்கிறாள்
எனக்குச் சொல்ல வேண்டியதையும்
வேண்டாததையும்
ஒரே நேரத்தில்
வேண்டியவர்களாயும்
வேண்டாதவர்களாயும்