விதைத்ததும் வதைத்ததும்
வார்த்தைகளைப் புதைத்துவிட்டு
வசதிகளைப் பின்தொடர்ந்தேன்
கனவுக் கடலில்
மிதந்து,
கரையொதுங்கி
விடிகாலையில் விழிகளைத்
தட்டித் திறந்து
மனம் குடையும் வார்த்தைகள்
தோட்டத்தில்
கொலைசெய்து புதைத்த
பிணத்தின் விரல் மட்டும்
அதிர்ச்சி தர
வெளி நீட்டல் போல
வரும்
வார்த்தைகளின்
அடங்கிய உயிர்த்துடிப்பு
சில நேரம் கேட்பது போலிருக்கும்
Friday, 14 January 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment