எண்ணிலா அண்டம் இயற்கையில் எழுந்த
இயல்பினை கண்டுபி டித்தோம்
ஏகன
னேகன் என்றெலாம் உரைத்த
எவரது புளுகைம றுத்தோம்
வெண்ணிலா மீன்கள் செங்கதிர் உலவும்
வீதியை அளந்துமு டித்தோம்
விரைகிற
செயற்கைக் கோள்களை அனுப்பி
சனியையும் புகைப்படம் பிடித்தோம்
ஆழ்கடல் இறங்கி திமிங்கலம் சுறாமீன்
கோரலின் சாரம றிந்தோம்
ஆப்பிரிக்காவில்
மனித குலத்தின்
ஆரம்ப வாழ்வைப் புரிந்தோம்
பாழுடல் என்று ஒதுக்கிய உடலின்
பாகமும் வேலையும் குறித்தோம்
பவித்திர
மான கடவுளின் தொண்டர்
பார்க்கிற வகையில் விரித்தோம்
தத்துவம் என்று பித்தர்கள் பேசும்
சாரமில் கதைதோற் கடித்தோம்
தாமுயர்
வென்று சாஸ்திரம் காட்டும்
சழக்கரும் நடுங்கிட விழித்தோம்
மூத்தவர் சொன்ன முறைகளில் அடக்கு
முறைகளை மூச்சொடெ திர்த்தோம்
முன்னரோ
இன்றொ சொன்னதைக் குறள்போல்
சான்றுடன் பகுத்த றிந்தோம்
No comments:
Post a Comment