இந்த மாளிகைகளின், சிம்மாசனங்களின், கிரீடங்களின் உலகம்
இந்த மனிதவிரோதிகளின் சமூகங்களின் உலகம்,
சொத்துக்களின் பசியுள்ளோரின் செல்வத்துக்கான உலகம்,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும் தான் என்ன?
ஒவ்வொரு இதயத்திலும் காயம்,
ஒவ்வொரு ஆத்மாவும் தாகத்தில்,
பார்வைகளில் தவிப்பு, மனங்களில் துயரம்,
இது என்ன உலகமா? இல்லை அர்த்தமற்றவைகளின் ராஜியமா?,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?
எங்கு மனிதனின் ஆளூமை ஒரு பொம்மையோ
இது பிணங்களை கும்பிடுபவர் குடியிருப்பு,
எங்கு மனிதனின் வாழ்வைவிட மரணம் விலைகுறைந்ததோ
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும் என்ன?
இளமை சுற்றித் திரிகிறது அவநம்பிக்கைகளுடன்,
இளைய உடல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன விற்பனைக்காக,
எங்கே காதல் வியாபாரமாகிறதோ,
அந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?
இந்த உலகம் இங்கே மனிதன் ஒரு பொருட்டில்லை,
உறவின் உறுதியோ, தோழமையோ ஒன்றும் இல்லை,
எங்கே காதலுக்கு ஒரு மரியாதை இல்லையோ,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?
எரித்துவிடுங்கள் இதை, ஊதி அணைத்துவிடுங்கள் இந்த உலகை,
என் முன்னாலிருந்து அகற்றிவிடுங்கள் இந்த உலகை,
இந்த உலகம் உங்களுடையது அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
_______________________________________________________________________________
ப்யாசா(Pyasaa) கவிஞர் சாஹிர் லுதியான்வி,: பாடியவர் மொகம்மது ராஃபி
படத்தில் கவிஞன் நொந்து பாடும் பாடல். எப்போது கேட்டாலும் மனதை உலுக்கும் வார்த்தைகள், இசை, குரல். கடைசி வார்த்தைகளில் வர வர உச்ச ஸ்தாயிக்குச் சென்று,..குரல். சாபமாகிச் சுடும். (Pyasaa, a film by Gurudutt)
Tuesday, 16 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment